புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் புலோப்பளை புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கருத்துரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் திருமதி பப்சி மரியதாசன் அவர்கள் கலந்து தற்காலத்தில் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சிறப்புரை வழங்கினார்.
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் 200 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

