குருநகர் பங்கில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான விசேட கருத்தமர்வு 23ஆம் திகதி வியாழக்கிழமை புனித யாகப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் கலந்து திருப்பலியின் மறைபொருள் பற்றியும் அன்பிய ஏழு படிமுறை தொடர்பாகவும் கருத்துரை வழங்கினார்.
இக்கருத்தமர்வில் அன்பிய ஆணைக்குழு யாழ். மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை இருதயராஜ் அவர்களும் 60 வரையான அன்பிய ஊக்குவிப்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

