ஓசை பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் யாழ் நகரின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த சுகிர்தன் – ஜெனோசன் ஆகிய இரு இளைஞர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான “அந்தோனி” திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடலும் பங்குனி மாதம் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.

ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 20க்கும் அதிகமான குருக்கள் துறவிகள் கலந்து திரைப்படத்தை பார்வையிட்டு திரைப்படம் தொடர்பான கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.

ஒரு சாமானிய குடும்பத்தின் வாழ்வியல் கதையுடன் இணைந்த ஒரு கடற்தொழில் சமூகத்தின் நம்பிக்கை, பாரம்பரியம், அன்பிய வாழ்வு, போன்ற அடிப்படை அம்சங்களை தத்துரூபமாக வெளிக்கொணரும் வகையில் நம் நாட்டு கலைஞர்களின் நடிப்புடன் இந்தியா நாட்டு கலைஞர்களையும் இணைத்து இசைஞானி இளையராஜா அவர்களின் உயிரோட்டமான பாடல்களுடன் தமிழ், சிங்களம், மலையாளம் ஆகிய மும்மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.

By admin