வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் பங்குனி மாதம் 09ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், திருச்செபமாலை, திருப்பலி, தியான உரை என்பவை இடம்பெற்றன.
தியான உரையை உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல இயக்குநர் வின்சென்சியன் சபை அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்கள் வழங்க பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் தமிழ் மறைமாவட்டங்களை சேர்ந்த 200ற்கும் அதிகமான குருக்கள், துறவிகள் பங்குபற்றினர்.

By admin