யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள ‘காவிய நாயகன்” திருப்பாடுகளின் ஆற்றுகை வருகின்ற 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் பிரமாண்டமான காட்சியமைப்புடன் மேடையேற்றப்படவுள்ளது.
“காவிய நாயகன்” திருப்பாடுகளின் காட்சி திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குநர் அமரர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் எழுதப்பட்டு அவரது நெறியாள்கையில் முதன் முதலாக 2001ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 2004, 2008, 2013, 2022ஆம் ஆண்டுகளிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டதுடன் தற்பொழுது 6ஆவது தடவையாக மேடையேற்றப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin