யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2022ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாமெனவும் விண்ணப்ப படிவங்களை கல்லூரி நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை கல்லூரியின் பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூரணப்படுத்திய விண்ணப்ப படிவத்துடன் பிறப்புச்சான்றிதழை இணைத்து சித்திரை மாதம் 24ஆம் திகதிக்கு முன்பாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மாணவர்களுக்கான அனுமதிப்பரீட்சை ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin