இளவாலை புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரி இராஜேஸ்வரி மற்றும் ஆசிரியை புளோரன்ஸ் ஆகியோர் கலந்து தியானத்தை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 90 வரையான மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.
அத்துடன் ஆலய மணிக் கோபுரம் திறப்பு விழாவும் பங்குனி மாதம் 05ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மணிக் கோபுரத்தை பங்குத்தந்தை அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin