மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை பங்குனி மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.
மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலம் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயங்களினூடாக கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்தை சென்றடைந்தது.
தொடர்ந்து சிலுவைப்பாதை தியானமும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் நடைபெற்றன.
இப்பாதயாத்திரையில் 3000ற்கும் அதிகமா இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin