உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு. லலித் பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பன இடம்பெற்றன.

இத்தியானத்தில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin