தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு மையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் பங்குனி மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு உயர் மறைமாட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள ஜோ நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது.
தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதற்கு பொறுப்பான பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஷாந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்டங்களின் ஊடக மையங்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் ஆராயப்பட்டன.

