யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மகளிர் தின சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு நடைபவனியும், அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன. விழிப்புணர்வு நடைபவனி யாழ். பொதுநூலக முன்றலில் ஆரம்பமாகி யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தை வந்தடைந்து அங்கு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்அரங்க நிகழ்வில் விருந்தினர்களின் உரையும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
வட மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் திருமதி ராஜமல்லிகை அவர்கள் பிரதம விருந்தினராகவும் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் மற்றும் யாழ். மாவட்ட செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தயாபரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பயனாளிகள், கியூடெக் உத்தியோகத்தர்களென பலரும் பங்குபற்றினர்.

