புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை விமல் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin