திருகோணமலை மறைமாவட்ட குருவும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான அருட்தந்தை நவரெத்திணம் – நவாஜி அவர்களின் “சிலுவைப்பாடுகள் அன்றும் இன்றும்” நூல் வெளியீடு மாசி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற திருநீற்றுப்புதன் திருப்பலியை தொடர்ந்து இந்நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.
முதற்பிரதியை பிரான்சிஸ்கன் சபை மடத்தலைவி அருட்சகோதரி விக்டோரியா அவர்களிற்கு அருட்தந்தை நவாஜி அவர்கள் வழங்கிவைத்தார்.
சிலுவையில் இயேசு மொழிந்த உயிருள்ள ஏழு வார்த்தைகளின் விரிவாக்க விளக்கத்துடன் தவக்கால நாளாந்த சிந்தனைகள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

By admin