மல்வம் உடுவில் பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரன் எமில்டன் அவர்கள் வளவாளராக கலந்து குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கருத்துரைகள், குறும்படக்காட்சி என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நற்கருணை வழிபாடும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், மறையாசிரியர்கள், மறைக்கல்வி மாணவர்களென 100ற்கும் அதிகமானோர் பங்குபற்றியிருந்தனர்.

