மன்னார் மறைமாவட்ட மாந்தை, மன்னார், மடு மற்றும் முருங்கன் மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை கிருஸாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்றன.
திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்தியானத்தில் 80ற்கும் அதிகமான மறையாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

