மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை குரு அருட்தந்தை யோசப் இக்னேசியஸ் சந்திரா அவர்கள் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1992ஆம் ஆண்டு திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் திருகோணமலை புனித மரியாள் பேராலய உதவிப் பங்குத்தந்தையாகவும், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம், ஆயித்தியமலை சதாசகாய அன்னை திருத்தலம், தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் ஆகியவற்றின் பங்குத்தந்தையாகவும், செங்கலடி பங்கின் இணைப் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin