மன்னார் மறைமாவட்டம் பம்பைமடு பங்கின் சாம்பல்தோட்டம் புனித காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை வவுனியா பூவரசங்குளம் வின்சென்சியன் இல்ல குழும முதல்வர் அருட்தந்தை பசில் கிளைன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
அத்துடன் மன்னார் மறைமாவட்டம் முருங்கன் டொன் போஸ்கோ சலேசிய இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட டொன் போஸ்கோ திருவிழாவும் இல்ல பொறுப்பாளர் அருட்தந்தை வில்லியம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

