பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலர்சபை தின சிறப்பு நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் அருட்சகோதரன் எமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து மாலை சிறார்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றது.

பங்கு பணிமனையில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் சிறார்களுக்கான விளையாட்டுக்களும் கலைநிகழ்வுகளும், மகிழ்வு விருந்தும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin