இளவாலை மறைக்கோட்ட பங்கு இளையோருக்கான ஒன்றுகூடல் தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும், இளையோருக்கான குழுச்செயற்பாடுகளும், புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றன.
நிர்வாகத்தெரிவில் மாதகல் பங்கை சேர்ந்த செல்வன் யூட் நிக்ஸன் அவர்கள் தலைவராகவும் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த செல்வி செறோனி அவர்கள் செயலாளராகவும் இளவாலை புனித அன்னம்மாள் ஆலயத்தை சேர்ந்த செல்வன் அபிசேக் அவர்கள் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ், யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் மற்றும் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

