பிரான்ஸ் திருமறைக்கலாமன்ற பொங்கல்தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிஸ் நகரில் நடைபெற்றது.

மன்ற தலைவர் திரு. ரஞ்சன் மற்றும் செயலாளர் றெஜினா சிவகுமரன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருமறைக்கலாமன்ற ஸ்தாகப இயக்குநர் அருட்தந்தை அமரர் மரியசேவியர் அடிகளாருக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து சமய வழிபாடும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் மன்ற அங்கத்தவர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin