மன்னார் மறைமாவட்டம் தட்சனாமருதமடு பங்கிற்குட்பட்ட புனித அந்தோனியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா தை மாதம் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மார்க் டிலோசன் ரஜீவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

