மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடுவலய பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட அஞ்சலோட்டப்போட்டி தை மாதம் 28, 30ஆம் திகதிகளில் மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 50ற்கு மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 700ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் மற்றும் மடு வலயத்தினைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் பங்குபற்றியதுடன் இந்நிகழ்விற்கான அனுசரணையை மனோன்மணி அறக்கட்டளை நிறுவனம் வழங்கியிருந்தது.

By admin