மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வுகள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரைகள், சிந்தனைகள், இறைவார்த்தை பகிர்வு என்பன நடைபெற்றன.

சிறப்புரைகளை மன்னார் கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ், முருங்கன் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ரஜீவன் லியோ, முருங்கன் மெதடிஸ்த திருச்சபை தலைவர் நித்தியஜீவன் ஆகியோர் வழங்கியதுடன் இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், முருங்கன் பங்குமக்கள், மெதடிஸ்த திருச்சபை மக்களென பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin