திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு நிர்வாக சபை கூட்டம் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன் திருகோணமலை மறைமாவட்டத்தின் நிலாவெளி மறைக்கோட்ட இளையோருக்கான கூட்டமும் அன்றைய தினம் சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளையோருக்கான ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு நிர்வாக அங்கத்தவர்களும் சாம்பல்தீவு பங்கு இளையோரும் பங்குபற்றியிருந்தனர்.

