யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரி விளையாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 17ஆவது அமல்சீலன் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சென் ஜோண்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

தரம் 4 மற்றும் 5 மாணவர்களுக்கான 11 வயதுக்குட்பட்டோருக்கான இச்சுற்றுப்போட்டியில், புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் A மற்றும் B என இரண்டு அணிகள் பங்கேற்றன.

சென் ஜோண்ஸ் கல்லூரி B அணி, புனித பத்திரிசியார் கல்லூரி B அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வெண்றது. அதேவேளை, புனித பத்திரிசியார் கல்லூரி A அணி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி A அணியுடனான போட்டியை 0:0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்தது.

பின்னர் நடைபெற்ற போட்டியில், புனித பத்திரிசியார் கல்லூரி A அணி சென் ஜோண்ஸ் கல்லூரி A அணியை 3:1 என்ற கோல் கணக்கிலும் புனித பத்திரிசியார் கல்லூரி B அணி யாழ்ப்பாணக் கல்லூரி B அணியை 2:0 என்ற கோல் கணக்கிலும் வென்றனர்.

அத்துடன் புனித பத்திரிசியார் கல்லூரி A அணி யாழ்ப்பாணக் கல்லூரி A அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டதுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி B அணி புனித பத்திரிசியார் கல்லூரி B அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வென்றனர்.

By admin