யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் முத்தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா ஐப்பசி மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் செல்வன் ஜோண் பிரிஸ்சிகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பாடசாலை மட்ட தமிழ்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக தமிழ்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. ஈஸ்வரநாதப்பிள்ளை குமரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பாலசிங்கம் பாலகணேஸன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

