வடமாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்டோருக்கான பளுதூக்கல் போட்டி ஆனி மாதம் 19, 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் அருளன்பன் 55 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாம் இடத்தையும், செல்வன் கிரிம்ஸிகன் 109 கிலோகிராம் நிறைப்பிரிவில் இரண்டாமிடத்தையும், செல்வன் ஸ்ரனிஸ்ரன் 89 கிலோகிராம் நிறைப்பிரிவில் மூன்றாமிடத்தையும்பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் 17 வயதுக்குட்பட்டோருக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகாவித்தியாலய மாணவர்களான செல்வன் சாரோன் 61 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாமிடத்தையும் செல்வி கவ்வுனி 55 கிலோகிராம் நிறைப்பிரிவில் இரண்டாமிடத்தையும் செல்வி ஜானு 59 கிலோகிராம் நிறைப்பிரிவிலும் செல்வி எனிட்றோஸ் 64 கிலோகிராம் நிறைப்பிரிவிலும் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

