சுவிஸ் ஆர்க்கவ் தமிழ் கத்தோலிக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட லொய்க்கன் புனித லூர்து அன்னை திருவிழாவும், ஆர்க்கவ் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவும் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை பாலதாஸ் பிறாயன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

இத்திருப்பலியில் ஆர்க்கவ் பணியக இறை மக்களுடன் ஏனைய பணியக இறைமக்களும் கலந்துசெபித்ததுடன் சுவிஸ்லாந்து ஆலய மாநாட்டின் பொதுச் செயலாளரும் அலுவலக உதவியாளரும், மைக்ரேஸன் நிதித்துறை தலைவருமான திரு. இம்மாக்கும்ரோ மற்றும் அவரது மனைவியும் கலந்துகொண்டனர்.

By admin