மன்னார் மறைமாவட்டம் மாந்தை, வவுனியா மறைக்கோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட சமூக மேய்ப்புபணி கருத்தமர்வுகள் அண்மையில் நடைபெற்றன.

மாந்தை மறைக்கோட்ட கருத்தமர்வு சித்திரை மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்திலும் வவுனியா மறைக்கோட்ட கருத்தமர்வு 15ஆம் திகதி புதன்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் நடைபெற்றன.

மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாட்டு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் தலைமையில் “மறைமாவட்டத்தின் சமூக மேய்ப்புப்பணி சார்ந்த தேவைகள் மட்டில் தூய ஆவியருக்கு செவிமெடுத்தல்” என்னும் கருப்பொருளில் இக்கருத்தமர்வுகள் நடைபெற்றன.

இந்தியாவிலிருந்து வருகைதந்த இயேசு சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய இக்கருத்தமர்வுகளில் கருத்துரை, குழுஆய்வு, கலந்துரையாடல் என்பன இடம்பெற்றன.

By admin