நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனித நீக்கிலார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து ஆலய வளாகத்தில் மறைக்கல்வி மாணவர்களின் சந்தை நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து அன்று மாலை நாவாந்துறை புனித மரியன்னை ஆலயத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

By admin