கொக்கிளாய் புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை உடுப்புக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin