இலங்கை கத்தோலிக்க திருஅவையில் குருத்துவப் பயிற்சிபெறும் மாணவர்களின் உருவாக்கல் பணியில் ஈடுபடும் உருவாக்குநர்களுக்கான பயிற்சி புரட்டாதி மாதம் 13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த சலேசியன் சபை அருட்தந்தை பினு அவர்கள் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்திய இப்பயிற்சி கருத்தமர்வில் உருவாக்கத்தில் உளவியலின் பங்கு, உருவாக்கத்தில் உள்ளவர்களுக்கான மதிப்பீட்டு முறைமமை, ஆளுமை விருத்தி, ஆன்மீக உருவாக்கல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி உருவாக்குனர்கள் அருட்தந்தையர்கள் குயின்சன் பெர்னான்டோ, டினேஸன் ஆகியோர் உட்பட 22 உருவாக்குனார்கள் பங்குபற்றி பயனடைந்தார்கள்.
