கிர்கிஸ்தானில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் உலக வலுதூக்கல் போட்டியில் பங்குபற்றிய யாழ். சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி செல்வி சாதனா, 23 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
பதக்கங்களை வென்று நாடு திரும்பிய செல்வி சாதனாவுக்கு, புரட்டாதி மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயப் பங்குமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

