தேசிய மறைக்கல்வி ஞாயிறை முன்னிட்டு மணியந்தோட்டம் வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் புரட்டாதி மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் மாதகல் புனித லூர்து அன்னை கெபி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 50 மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
அத்துடன் வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை குயின்சன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 06 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

