கள அனுபவ சுற்றுலா
மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர்கள் நுவரெலியா பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற…
கல்முனை மரிய தெரேசியா கல்லூரி விளையாட்டுப்போட்டி
மட்டக்களப்பு கல்முனை மரிய தெரேசியா கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்சகோதரி வசந்தமலர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்கள்…
உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல மையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த 9ஆவது அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
Caritas Food city திறப்புவிழா
வறிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கிராம மட்ட உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தில் அமைக்கப்பட்டுவந்த Caritas Food city கட்டடத்தொகுதியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வரும் கரித்தாஸ் எகெட்…
தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் திருவிழிப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் திருவிழிப்பு ஆராதனை நடைபெற்றது. 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
