எழுவைதீவு புனித தோமையார் ஆலய இளைஞர் மன்ற இரத்ததான முகாம்

எழுவைதீவு புனித தோமையார் ஆலய புனித ஞானப்பிரகாசியார் இளைஞர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்இரத்ததான முகாமில் 62 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து…

வவுனியா மறைக்கோட்ட புதுப்பித்தல் தியானத்திற்கான முன் ஆயத்தக் கூட்டம்

மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 50ஆவது ஆண்டு ஜூபிலி விழா 2031ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ஐந்தாண்டு ஆயத்த தியானத்தின் ஒரு கட்டமாக, வவுனியா மறைக்கோட்டத்தில் நடைபெறவுள்ள புதுப்பித்தல் தியானத்திற்கான முன் ஆயத்தக் கூட்டம், புரட்டாதி மாதம் 16ஆம் திகதி…

அகில இலங்கை தமிழ்தின போட்டி

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அகில இலங்கை தமிழ்தின போட்டி புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை பத்திரமுல்லை இசுருபாய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி…

புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா பண்பாட்டு ஊர்த்திப் போட்டி

புதுக்குடியிருப்பு பங்கின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா பண்பாட்டு ஊர்த்திப் போட்டி புரட்டாதி மாதம் 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 20…

திருச்சிலுவை கன்னியர்களின் திருவிழா

திருச்சிலுவை கன்னியர்களின் திருவிழா புரட்டாதி மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர்மட சிற்றாலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.