ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மாகாண அமல மரித்தியாகிகள் சபைக் குருவும், தற்போது இந்தியா நாட்டில் உளவியல் கற்கை நெறியை மேற்கொள்பவருமான அருட்தந்தை ஜஸ்ரின் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயார் யோசேப் சலேற்றம்மா அவர்கள் 19ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி…

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தற்போது மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய பேரருட்தந்தை இம்மானுவேல் பொர்னாண்டோ அவர்கள் 76 வயதில்…

1984 ஆம் ஆண்டு மன்னார் படுகொலைகளின் 40ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

1984 ஆம் ஆண்டு மன்னார் படுகொலைகளின் 40ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு 14ஆம் திகதி ககடந்த சனிக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அமைந்துள்ள டொன் பொஸ்கோ இல்லத்தில் நடைபெற்றது. முருங்கன் பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

இளவாலை திருமறைக்கலாமன்ற தின மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள்

இளவாலை திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்றதின மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றன. மன்ற அங்கத்தவரும் World Vision நிறுவன பணியாளருமான திரு. நிதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா…

செயற்பட்டு மகிழ்வோம் போட்டி

இலங்கை கல்வித்திணைக்களத்தால் வட மாகாண பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டி கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 04,05 மாணவர்கள் முதலாமிடத்தை பெற்று சம்பியன்…