அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள்

மட்டக்களப்பு புனித மரியாள் ஆலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் அருட்தந்தை…

திருவிழிப்பு ஆராதனைகள்

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் திருவிழிப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்திலும் திருவிழிப்பு ஆராதனை நடைபெற்றது. அன்றையதினம்…

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு அண்மையில் நடைபெற்றது. இத்தெரிவில் அருட்சகோதரி ஜொய்லின் றாஜி ஸ்ரான்லி அவர்கள் மாகாண தலைவியாகவும் அருட்சகோதரி ஜெசிக்கா அல்பேட் பற்றிக் அவர்கள் பொருளாளர் மற்றும் ஆலோசகராகவும், அருட்சகோதரிகள் மெற்றில்டா…

அரங்க ஆற்றுகை ஊடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஹப்புத்தளை மற்றும் புத்தளம் பிராந்நிய மன்ற இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட அரங்க ஆற்றுகை ஊடான நல்லிணக்கத்தை நோக்கிய ஒன்றிணைவு நிகழ்வு 31ஆம் திகதி சனிக்கிழமை ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது. ஹப்புத்தளை திருமறைக்கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வில்…

“நித்தமும் நினைந்திட” திரு இசை நூலினை இறைமக்கள் பெற்றுக்கொள்ளவதற்கான ஒழுங்குகள்

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலையத்தால் வெளியிடப்பட்ட “நித்தமும் நினைந்திட” திரு இசை நூலினை இறைமக்கள் பெற்றுக்கொள்ளவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 800 திருப்பலி பாடல்களை உள்ளடக்கிய இந்நூல் ஒன்றின் விலை 1000 ரூபாயெனவும்…