Category: What’s New

யாழ். மறைமாவட்ட குருமுதல்வருடனான சந்திப்பு

செபமாலை தாசர் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை அனில் கிறிஸாந்த அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு 23ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்டத்தில் 10 புதிய குருக்கள்

மன்னார் மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தின நிகழ்வுகளுக்கான கூட்டம்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் முகமாக தனிநாயக தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மறைமாவட்ட மற்றும்…

சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய திருவிழா

சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய 120ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 17ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

நெடுந்தீவு பங்கில் மரியாயின் சேனை ஆர்ச்சேஸ் விழா

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை ஆர்ச்சேஸ் விழா 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் அங்கத்தவர்களின் அர்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் 16 மரியாயின்…