Category: What’s New

நெடுந்தீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நெடுந்தீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அருட்தந்தை சோபன் அவர்களின் வழிநடத்தலில் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இத்திருவிழாவில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். கடந்த 11ஆம்…

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஓரணியாக முன்னெடுக்க அழைப்பு – யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தியும், ஆயுத போருக்கு பின்பும் தமிழர் தாயக பகுதியில் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பு செயற்பாடுகளை சாத்வீக ரீதியாக எதிர்ப்பதன் அடையாளமாகவும் மே மாதம்…

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் 75ஆவது அகவை

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தனது 75ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கிறார். இந்நாளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வு யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து கேட்போர்கூடத்தில் ஆயர்…

79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் யாழ். மறைமாவட்டத்தில்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் 79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் நிகழ்வு 5, 6, 7ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர்…