புதுப்பொலிவுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம்

15.11.2020 ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களினால், புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.புனித மடுத்தினார் குருமடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது குருமடம்.

Continue reading புதுப்பொலிவுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கு இணைய (Online) வழியில் வருடாந்த தியானம்.

தற்போதைய தனித்திருத்தல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற சூழ்நிலை காரணமாக யாழ். மறைவட்ட குருக்களின் வருடாந்த தியானம் இம்முறை இணைய வழியில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்டத்தின் 110 குருக்கள் தத்தம் பணித்தளங்களில் இருந்தவறே பங்கு கொண்ட இத்தியானம் நவம்பர் 9ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.

Continue reading யாழ். மறைமாவட்ட குருக்களுக்கு இணைய (Online) வழியில் வருடாந்த தியானம்.

இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்

சக்கோட்டை பங்கு இளையோர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இன்று “இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மரம் நாட்டுதல் நிகழ்வு காலை திருப்பலியை தொடர்ந்து சாக்கோட்டை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்பணி.J.பிரான்சிஸ் அடிகளாரின் தலைமை யில் நடைபெற்ற. இந்நிகழ்வில் 20ற்கு மேற்பட்ட பயன்தரு மரங்கள் இளையோர் மன்றத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நாட்டப்பட்டன.

Continue reading இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்

‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க விசேட வழிபாடு

‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க ஆண்டவரின் அருள் வேண்டி செபிக்கும் விசேட திருப்பலி 24.10.2020 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Continue reading ‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க விசேட வழிபாடு

Inauguration of the Academic Year 2020-2021- St. Francis Xavier’s Seminary – Columbuth.

The Inauguration of the Academic Year 2020-2021, took place in the Seminary on Thursday 01.10. 2020. At 8.30 am Concelebrated Eucharistic Celebration was presided over by Rt . Rev. Dr. Justin B. Gnanapragasam. Lecrio Brevis was given by Rev. Fr. M. Rex Saunthara on “An Application of Martin Buber’s ” I Tho ” Concept to the Formation of Anpiyam.

Continue reading Inauguration of the Academic Year 2020-2021- St. Francis Xavier’s Seminary – Columbuth.

அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அடிகளார் வாழ்நாள் பேராசிரியர்

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பணியாற்றிவரும் அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அவர்கள் வாழ்நாள் பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நியமனம் பெற்றுள்ளார்.

அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்

யாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் பாதுகாவலரான புனித. யோண் மரிய வியன்னியின் திருநாள் 24-09-2020 வியாழனன்று யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 9.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இத்திருப்பலியைத் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்து மறையுரையாற்றிய ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் குருக்கள் புனித யோண் மரிய வியன்னியைப் போன்று அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றவேண்டுமென அறிவுறுத்தினார்.

Continue reading அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்

200 ஆண்டு நிறைவு நாள்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு 19.09.2020 சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதியம் 12.00 மணியளவில் மடுத்திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Continue reading 200 ஆண்டு நிறைவு நாள்

புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் எடுதுக்காட்டான முயற்சி

தேசிய இளையோர் தினத்தில் புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் முயற்சியால் புது குடியிருப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு வறிய குடும்பத்திற்கு தற்காலிக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோரின் இம்முயற்ச்சி அப்பிரதேசத்தில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Continue reading புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் எடுதுக்காட்டான முயற்சி

‘நாடகக் கீர்த்தி’ விருது மரிய சேவியர் அடிகளாருக்கு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக்கழகம், அரச நாடக ஆலோசனைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 11.09.2020 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு, தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற அரச நாடாக விழாவில் அரச உயர் விருதுகளில் ஒன்றான ‘நாடகக் கீர்த்தி’ விருது திருமறைக் கலாமன்ற இயக்குநர் அருட்கலாநிதி மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்ட து.

Continue reading ‘நாடகக் கீர்த்தி’ விருது மரிய சேவியர் அடிகளாருக்கு