அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி
செபமாலைதாசர் சபை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி மற்றும் நல்லாயன் சபை அருட்சகோதரி மேரி பற்றிமா அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 40ஆவது ஆண்டு நிகழ்வுகள் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. நாவாந்துறை புனித பரலோக…
எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை
எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி கனிஸ்ர மகாவித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை பெனடிக் சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் புனித தோமையார்…
ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை
ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
நல்லூர் புனித திரேசாள் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
நல்லூர் புனித திரேசாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
யாழ்ப்பாணம், கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம், கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம்…