மன்னார் மறைமாவட்டம், வவுனியா பூவரசங்குளத்தில் அமைந்துள்ள வின்சென்சியன் சபை இல்லத்தில், சபை நிறுவனர் புனித வின்சென்ட் டி போல் அவர்களின் திருப்பண்டம் நிறுவும் நிகழ்வு நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருட்தந்தை பசில் கிளைன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள்; கலந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து சிற்றாலயத்தில் திருப்பண்டத்தை நிறுவியதுடன் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட புனித அற்புத பதக்க அன்னையின் திருச்சுரூபத்தையும் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

By admin