திருமறைக் கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

திருமறைக்கலாமன்ற நிர்வாக இயக்குனர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

மன்ற அங்கத்தவர்கள், இறந்தவர்களின் உறவினர்களென பலரும் கலந்து இறந்தவர்களின் படங்களுக்கு ஒளியேற்றி அஞ்சலிசெய்து திருப்பலியில் கலந்து செபித்தனர்.

By admin