யாழ்ப்பாணம், மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய பரிசளிப்பு விழா ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை பாடசாலையின் அருட்தந்தை டேவிட் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 2023,24,25ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அத்துடன் பாடசாலையின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் பௌதிக வளர்ச்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘திறவுகோல்’ நூலும் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வேலணை கல்விக்கோட்ட பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிருந்தா ராகவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மண்டைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை அலோய் அருணேஸ்குமார், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவியும் ஆசிரியருமான திருமதி அன்ரன் ஜோ அமல்ராஜ் புனிதசீலி மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் திரு. மெலானியஸ் டிசாந்தன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

