கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்மொழி மூலமான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி நவம்பர் மாதம் 14ஆம் 15ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்டங்களில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் 15ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்டத்துக்கான போட்டியில் 09 அணிகளும், மன்னார் மறைமாவட்ட கலைஅருவி சமூகத் தொடர்பு ஆணைக்குழு மண்டபத்தில் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான போட்டியில் 6 அணிகளும் பங்குபற்றியிருந்தன.

