நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அமலமரித்தியாகிகள் சபையின் யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியகத்தினால் சுயதொழில் பயிற்சிகளும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியகத்தின் இணைப்பாளர் அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உலக வறியோர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மணிப்புரி கிராமத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

நலிவுற்ற குடும்பங்களின் நல்வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த சபையின் நிறுவுநரான புனித இயூஜின் டி மசனட் அவர்களின் ஆசீருடன், யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியகம் கடந்த ஆறு ஆண்டுகளாக நலிவுற்ற குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin