2027ஆம் ஆண்டு இலங்கை திருஅவையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நற்கருணை ஆண்டை சிறப்பித்து அமலமரித்தியாகிகள் சபை மறையுரைஞர் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கருத்தமர்வு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பகத்தில் நடைபெற்றது.

குழும தலைவர் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களின் தலைமையில்; இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்கள், நாம் கொண்டாடுவதை வாழ்வாக்குவது: நற்கருணையின் மனிதராக குரு எனும் தலைப்பிலும், அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்திரநாயகம் அவர்கள் பழைய ஏற்பாட்டுப் பின்னணியும் நற்கருணையும் எனும் தலைப்பிலும், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்கள் புதிய ஏற்பாட்டுப் பின்னணியும் நற்கருணையும் எனும் தலைப்பிலும் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பலிப்பீடம் தொடங்கி வீதி வரை எனும் தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin