யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி நவம்பர் மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

திருப்பலியை அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் சபை ஆன்மீக இயக்குநராக பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய சபை உறுப்பினர்கள், பந்நி உறுப்பினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin