யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் நவம்பர் மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் பங்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.
அன்றைய தினம் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் இளவாலை மறைக்கோட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்கத்தவர்களை சந்தித்த ஆயர் அவர்கள் மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தையும் தரிசித்து, அங்கு மானிப்பாய் புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர்களையும் அவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

